Chennai Poonamallee To Vadapalani Metro Train Update : சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் வழித்தடங்களில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்லவேறு வழித்தடங்களில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பச்சை வழித்டத்தில் சென்ட்ரல் - பரங்கிமலை, நீல வழித்தடத்தில் விம்கோ நகர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோவானது பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் வடபழனி வரை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து இறுதி நிலையை எட்டியுள்ளது கிட்டதட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தன.
முக்கியமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு , ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனையும் நடத்தப்பட்டது. அதாவது, பூந்தமல்லி முதல் போரூர் வரை ரயில்கள் மணிக்கு 40 கிமீ மற்றும் 80 கிமீ வேகத்திலும், போரூரில் இருந்து வடபழனி வரை மணிக்கு 40 கிமீ வேகத்திலும் சோதனை ஓட்டமானது நிகழ்த்தப்பட்டது .
அதாவது பாதை அமைப்பு, உயர்மட்ட பாதை, சிக்னல், கட்டுப்பாட்டு அமைப்பு வசதி, மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வில் மேற்கொள்ளப்பட்டன.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ _அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அதிகாரப்பூர்வ அனுமதியானது வழங்கப்பட்டுஇருக்கிறது . ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து இந்த அனுமதியானது வழக்கப்பட்டுஇருக்கிறது .மேலும், பூந்தமல்லி வடபழனி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக இயக்கப்படும் மெட்ரோ
போரூரில் எந்தவொரு ரயில் நிலையங்களும் இல்லாத நிலையில் நேரடியாக போரூர் டு வடபழனிக்கு மெட்ரோவானது இயக்கப்பட இருக்கிறது. இதன்படி போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில்கள் எங்கும் நிற்காமல் செல்லும். மேலும் தேர்தலுக்கு முன்பாக மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.