சென்னைக்கு குட் நியூஸ் : ஏரிகளில் 6 டிஎம்​சி நீர் இருப்பு : டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது...!

சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் ஏரி​களில் தற்​போது 6 டிஎம்​சிக்கு மேல் குடிநீர் இருப்பு இருப்பதாகவும் , இதானல் , 6 மாதங்​களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Chennai:
6 TMC of water in storage; no drinking water shortage expected until December.
Chennai: 6 TMC of water in storage; no drinking water shortage expected until December.google
1 min read

சென்னைக்கு குட் நியூஸ்,குடிநீர் தட்டுப்பாடு இல்லை

சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் ஏரி​களில் தற்​போது 6 டிஎம்​சிக்கு மேல் குடிநீர் இருப்பு இருப்பதாகவும் , இதானல் , 6 மாதங்​களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாட வாய்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே எழுந்த அச்சம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தள்ளிபோகும் நிலை எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாகவும் கடுமையான வெப்பம் ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது , இந்த நிலையில் தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே இருந்து வந்தது

6 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது ,அதிகாரிகள் தெரிவிப்பு

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் ஏரி​களில் தற்​போது 6 டிஎம்​சிக்கு மேல் குடிநீர் இருப்பு உள்​ளது. சென்​னைக்​கு, ஒரு மாதம் விநி​யோகிக்க 1 டிஎம்சி நீர் தேவை.

அதனால் இப்​போது உள்ள குடிநீரை 6 மாதங்​களுக்கு பயன்​படுத்த முடி​யும் என்று தெர்வித்துள்ளது , இதனால் குடிநீர் தேவைக்கான தட்டுப்பாடு ஏர்படாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சென்னையில் குடிநீர் ஆதரமாக இருப்பவை

சென்​னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வழங்களான பூண்​டி, சோழ​வரம், செங்​குன்​றம், கண்​ணன் கோட்​டை- தேர்​வாய் கண்​டிகை, செம்​பரம்​பாக்​கம்,

வீராணம் ஆகிய ஏரி​களில் இருந்து குடிநீர் கொண்​டு​வரப்​படு​கிறது. இந்த ஏரி​களின் மொத்த கொள்​ளவு 13,222 மில்​லியன் கனஅடி இருப்பதாகவும்

நீர் இருப்பு விவரம்

கடந்த ஆண்டு இதே தேதி​யில் 7,670 மில்​லியன் கனஅடி இருந்​தது. கடந்த ஆண்டை விட இப்​போது 1,531 மில்​லியன் கன அடி குறை​வாக இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

====================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in