SIR : பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல்: ஜன.18 வரை திருத்தம்

Archana Patnaik on SIR Final Voter List 2026 in Tamil Nadu : பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும், என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
Chief Electoral Officer Archana Patnaik announced that SIR final voter list 2026 Tamil Nadu will be published on 2025 February 17
Chief Electoral Officer Archana Patnaik announced that SIR final voter list 2026 Tamil Nadu will be published on 2025 February 17ECI
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

Archana Patnaik on SIR Final Voter List 2026 in Tamil Nadu : 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியல்

இதைத்தொடர்ந்து கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது(SIR Draft Voter List 2025 in Tamil Nadu). தமிழகம் முழுவதும் சுமார் 97 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. மரணம் அடைந்தோர், இரட்டை வாக்குரிமை பெற்றோர், நிரந்தரமாக குடி பெயர்ந்தோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

திருத்தம் செய்ய ஜன.18வரை அனுமதி

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய ஜனவரி 18 ஆம் தேதி வரை(SIR Apply Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி(SIR Final Voter List 2026 Date in Tamil) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தம் :

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ” இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.

விவரங்களை உறுதி செய்ய அவகாசம்

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.01.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். அறிவிப்புக் காலகட்டமானது 2025 டிசம்பர் 19 முதல் 2026 பிப்ரவரி 10 வரை ஆகும்.

பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) / உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

13 ஆவணங்களில் ஒன்று அவசியம்

இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வர். இறுதி வாக்காளர் பட்டியலானது 17.02.2026 அன்று வெளியிடப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in