முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி : மருத்துவ பரிசோதனைகள்

CM MK Stalin Hospitalised in Apollo Hospital : லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CM MK Stalin Hospitalised in Chennai Apollo Hospital
CM MK Stalin Hospitalised in Chennai Apollo Hospital
1 min read

தலைசுற்றல் பாதிப்பு :

CM MK Stalin Hospitalised in Apollo Hospital : இன்று காலை வழக்கமான நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சருக்கு, லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர், அறிவாலயம் வந்த அவர், அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா(Anwar Raja Join DMK) திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரம் கலைக்கல்லூரி விழாவில் அவர் கலந்து கொள்ள இருந்தார். இந்தநிலையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு(Apollo Hospital) பரிசோதனைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் சென்றார்.

முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் :

முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு(MK Stalin Admitted) இருப்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுல்வர் கூறிய மருத்துவ அறிகுறிகளின் அடிப்படையில், தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு தேவையான பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், குடும்பத்தினர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர்.

விரைவில் வீடு திரும்புவார் :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன்(MK Stalin Health Condition) இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

Apollo Hospital Press Release on MK Stalin Health Update in Tamil
Apollo Hospital Press Release on MK Stalin Health Update in Tamil

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in