ID 79 சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
Chief Minister Stalin hoisted the national flag at a colorful ceremony held in Chennai
Chief Minister Stalin hoisted the national flag at a colorful ceremony held in Chennai
1 min read

79வது சுதந்திர தின விழா :

நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னையில் சுதந்திர தின விழா :

இதைத் தொடர்ந்து, சென்னையிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய கொடியே ஏற்றினார் முதல்வர் :

போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தில், மூவண்ண கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார்.

தியாகிகளை போற்றுவோம் :

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ” நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின விழா நாள் வாழ்த்துக்கள். தியாகிகளை போற்றுவோம். தியாகிகளை பெயரளவில் நினைவு கூர்ந்து மறப்பவர்கள் நாம் அல்ல. தமிழகத்தில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்று குறிப்பிட்டார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in