"ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகள்” : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிக்கல் : தவெக அரசை விளாசிய தமிழக பாஜக..!

ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளை முதல்வர் விஜய் செய்துள்ளார். சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்து உள்ளார்.
Chief Minister Vijay committed a thousand wrongs to cover up a single mistake. warned Nainar Nagendran
Chief Minister Vijay committed a thousand wrongs to cover up a single mistake. warned Nainar Nagendransource:thamizhalai,ai generated
1 min read

ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர்,. 'திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்து எந்த கடிதமும் ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை, நாங்கள் எதுவும் அதில் கருத்துக் கூறவில்லை' என திருப்பரங்குன்றத்தின் ஸ்தானீக பட்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை முதல்வர் விஜயின் ஆணவத்தையும், தவெக அரசின் அரசியல் பித்தலாட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

ஸ்தானீக பட்டர்களை கலந்தாலோசிக்கவில்லை

திருக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக ஆகம விதிகளின் படி பூஜை செய்து வரும் ஸ்தானீக பட்டர்களை, கடவுள்களின் புனிதத்தையும் கோயில்களின் அடையாளங்களையும் தங்களது பூஜை புனஸ்காரம் மூலம் இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஸ்தானீக பட்டர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவானது எடுக்கப்பட்டு இருக்கிறது.

பின்னணியில் இருப்பது யார்?

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? ஆலயத்தின் ஆகம விதிகள் தொடர்பாக யாரிடம் ஆலோசனை பெறப்பட்டது? அறங்காவலர் குழு நேற்று வெளியிட்ட அவசர அறிக்கையை, மாவட்ட ஆட்சியர் முறையாக ஆய்வு செய்து சரிபார்க்காதது ஏன்?

உச்சநீதிமன்றத்தில் பொய் அறிக்கையா?

அப்படியெனில் அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பொய் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிந்தே அவமதிக்கிறதா தவெக அரசு?

சிறுபான்மை வாக்குகளுக்காக அரசியலா?

சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே 'Accused' ஆக்கி வைத்துள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்? இப்படிப்பட்ட ஒருவர் இனியும் தமிழகத்தின் முதல்வராகத் தொடரலாமா?

ஸ்தானீக பட்டர்களை மிரட்டுவதா?

அதுமட்டுமன்றி, தங்களின் பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர், தவெக அரசின் ஏவல்துறையுடன் திருப்பரங்குன்றம் ஸ்தானீக பட்டரின் வீட்டிற்கே சென்று, மறு அறிக்கை வெளியிடுமாறு அவரை மிரட்ட முயன்ற நிலையில், தமிழக பாஜவினரும் ஹிந்து முன்னணியினரும் அங்கு திரண்டதால், வேறு வழியின்றி அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மக்களை ஏமாற்ற முடியாது

இச்சம்பவம், தவெக அரசு தமிழகத்தை ஆளத் தகுதியற்றது என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே, பொய் அறிக்கை மூலம் சட்டத்தையும் மக்களையும் ஏமாற்ற நினைத்த தவெக அரசுக்கு சட்டமும் அந்த தெய்வமும் தக்க பதிலடி கொடுக்கும்.

தவெக அரசின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த ஸ்தானீக பட்டர்களுக்கு பாஜ என்றும் உறுதுணையாக நிற்கும்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

==============================