TVK Govt 100 days : ”ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” : சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்...!

தவெக அரசின் 100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி என்று, முதல்வர் விஜய் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.
Chief Minister Vijay expressed pride, describing  TVK government's 100-day administration
Chief Minister Vijay expressed pride, describing TVK government's 100-day administration AI generated
2 min read

Chief Minister Vijay has expressed pride, describing the TVK government's 100-day administration as the conscience of the people for an entire era

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்து 108 இடங்களை கைப்பற்றிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து இருக்கிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

மே 10ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க, அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மேலும், தமிழகத்தில் காங்கிரஸ், விசிக. ஐயூஎம்எல் கட்சிகளோடு கூட்டணி ஆட்சியும் அமைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற கூட்டம்

ஆளுநர் உரையோடு சட்டமன்றம் நடைபெற, பின்னர், பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமன்ற கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

100 நாட்கள் ஆட்சி - வீடியோ வெளியிட்ட முதல்வர்

இந்தநிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி 100 நாள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு, "தவெக அரசின் 100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" என முதலமைச்சர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர், சாதனைகளை பட்டியலிட்டு இருக்கிறார்.

* ரூ.560 கோடி ஒதுக்கீட்டில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்'

* திருமண நன்னாளை சிறப்பிக்கும் வகையில் 'அண்ணனின் சீர்' திட்டத்தின் மூலம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

* பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்'

* பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை'

* கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை

* நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 எனச் சிறப்பு ஊக்கத்தொகை

* விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி

* கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டமான 'TN-VETTRI' மூலம் சுகாதாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி நிதி

* 'வெற்றி 150' திட்டத்தின் கீழ் 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு

* ரூ.2,000 கோடி செலவில் 'வெற்றி மடிக்கணினித் திட்டம்'

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள்

* 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' ரூ.710 கோடி ஒதுக்கீட்டில் விரிவாக்கம்

* 'வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்' மூலம் 12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் பயிற்சி

* போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள்

* மதுவிலக்கு கொள்கையின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 717 மதுபானக் கடைகள் மூடல்

* வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்

* எளிய மற்றும் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கிட 'வெற்றி வீடு திட்டம்' மூலம் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு

* 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்ப்பு

* வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி

* நேரடி தொடர்பற்ற (Contactless) பத்திரப் பதிவு முறைகள்"

என தவெக அரசின் 100 நாட்கள் சாதனைகளை முதல்வர் விஜய் பட்டியலிட்டு தெரியப்படுத்தி உள்ளார்.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in