”ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம்” : காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி வெள்ளிப் பதக்கம் : முதல்வர் விஜய் பாராட்டு.!

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள ராஜா முத்துப்பாண்டிக்கு, ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
Chief Minister Vijay  announced cash incentive of ₹30 lakh for Raja Muthupandi, who won a silver medal at Commonwealth
Chief Minister Vijay announced cash incentive of ₹30 lakh for Raja Muthupandi, who won a silver medal at CommonwealthAI generated
1 min read

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு

கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரரான ராஜா முத்துப்பாண்டி.

286 கிலோ எடையை தூக்கினார்

ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முதல்வர் விஜய் வாழ்த்து

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில், முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில்...

வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.

மேலும் சாதனைகள் படைக்கவும் பாராட்டு

அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மீண்டும் சர்வதேச போட்டிகள்

2018ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் காயம், அதற்கான சிகிச்சை உள்ளிட்ட காரணத்தால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கு கொள்ள முடியாமல் இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேச களத்துக்கு திரும்பினார். தற்போது வெள்ளி வென்று அசத்தி இருக்கிறார்.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in