”ஊழலை ஒழிப்பதே உண்மையான சுதந்திரம்” : தமிழக நலனை விட்டுத்தர மாட்டோம் : சதிகளை முறியடிப்போம், முதல்வர் விஜய் பேச்சு..!

ஊழலை ஒழிப்பதை உண்மையான சுதந்திரம் என்றும், 8 கோடி மக்களும் அரசுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும், சதிகளை முறியடிப்போம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
Chief Minister Vijay has stated that eradicating corruption constitutes true freedom
Chief Minister Vijay has stated that eradicating corruption constitutes true freedomAI generated
3 min read

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர்

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை ஒட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசிய கொடியேற்றினார். முதல்முறை தேசியக்கொடியை ஏற்றி வைத்த அவர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தமிழக மக்களுக்கு வாழ்த்து

சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம்.

லஞ்சத்தை ஒழிப்பதே விடுதலை

உடைந்து நொறுங்கும்போது தான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். அடிமையாக இருக்கிறோம் என்பது புரிந்தாலே ஒற்றுமை வந்துவிடும். முன்னேறும்போது, லஞ்சம், ஊழல் போன்றவற்றிலிருந்து காப்பதும் விடுதலைக்கு சமமானது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்

தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

வளர்ச்சி பாதையில் செல்கிறோம்

இன்னைக்கு நாம் எல்லாரும் அந்த சுதந்திரத்தை கெட்டியா புடிச்சுகிட்டு, படிப்படியா டெவலப் ஆகி வந்துகிட்டே இருக்கிறோம். அந்த டெவலப்மென்ட்ஸை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியது நாம் எல்லோருடைய ஒரு கடமையும் கூட.

ஊழலை ஒழிப்பதே இலக்கு

இந்த நேரத்துல நம்ம தமிழ்நாட்டில், நம்ம தமிழ்நாட்டை லஞ்சத்துல இருந்து, ஊழலில் இருந்து காப்பாத்துறதும் ஒரு மிகப்பெரிய ஒரு விடுதலைக்கு சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கி தான் நம்ம அரசும் செயல்பட்டுகிட்டு வந்துட்டு இருக்கு.

கொடியேற்ற வாய்ப்பு - அனைவருக்கும் நன்றி

386 ஆண்டு பழமையான இந்த கோட்டையில, 80-வது சுதந்திர தின நாள்ல, நம்ம நாட்டோட தேசியக் கொடியை ஏத்தி வச்சு, இன்னைக்கு இந்த விழாவில் என்னை பேசவும் வச்சிருக்கீங்க, அதுக்காக உலகம் முழுவதும் இருக்கிற என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்சி இளம் படை தோழர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுகிறேன்.

வெளிப்படையான நிர்வாகம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அப்படின்ற ஒரு மிகப்பெரிய ஒரு கோட்பாட்டை அடிப்படையில வச்சுதான் நம்ம தமிழ்நாட்டை லஞ்ச லாவண்யமற்ற, போதைப்பொருள் கலாச்சாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில,

ஒரு வெளிப்படையான, ஒரு உண்மையான, ஒரு நேர்மையான ஒரு நிர்வாகமா நாம செயல்பட்டுகிட்டு வந்துகிட்டு இருக்கிறோம். பொதுவாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது.

மக்கள் நலன்தான் முக்கியம்

மக்கள் நலன் தான் மிக மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த அடிப்படையிலதான் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டுகிட்டு வந்துகிட்டு இருக்கோம். அதே அடிப்படையிலதான் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலேயும், நம்ம சென்ட்ரல் கவர்மெண்ட்டுடன் நிர்வாக ரீதியா ஒத்துழைப்போட இருக்கிறோம்.

தமிழ்நாட்டு கொள்கை - உறுதியாக நிற்போம்

But at the same time, நம்ம தமிழ்நாடு கொள்கைகள்னு வந்துட்டா, மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகளிலேயும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கை முடிவுகளிலேயும் சரி, நம்ம டிவிகே அரசு எப்பவுமே எதிர்க்கும். அதுல எந்த மாற்றுக்கருத்துமே கிடையாது.

அதே மாதிரி இதுக்கு முன்னாடி நிறைய திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க, அதுல எதெல்லாம் வந்து மக்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கிற மாதிரி திட்டங்கள் இருக்கோ அதெல்லாம் கண்டினியூ பண்ணிக்கிட்டுதான் இருக்கிறோம்.

அம்மா உணவகம், காலை உணவுத் திட்டம்

ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டம். அதை இன்னும் மெருகேத்தி கண்டினியூ பண்ணிக்கிட்டுதான் இருக்கிறோம். அது மாதிரி காலை உணவு திட்டம், அதையும் இன்னும் விரிவுபடுத்தி, சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்ல இருந்து எய்த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் அதையும் விரிவுபடுத்தி, வர செப்டம்பர் 17-ஆம் தேதி பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் அன்னைக்கு அதை தொடங்க இருக்கிறோம்.

சோ, நம்முடைய அரசு, உங்களுடைய அரசு வந்து இந்த மூணு மாசம் ஆகுது. இந்த மூணு மாசம், இந்த மூணு மாசத்துல விவசாயிகளின் பயிர்க்கடன் ரூபாய் 5,093.23 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாள் தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் ரூபாய் 755.83 கோடியில் தொடங்கப்பட உள்ளது.

மக்களின் போக்குவரத்திற்கு ரூபாய் 127.21 கோடியில் 300 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தை குறைத்திடும் வகையில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆன்லைன் பத்திரப்பதிவு

வெளிப்படையான நிர்வாகத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. முன் எப்போதும் இல்லாத ஆளில்லா பத்திரப்பதிவு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் கணக்கிடப்பட்டு அனைவருக்கும் தெரியுமாறு ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. வருவாய் துறையில் அனைத்து சான்றிதழ்களும் 15 தினங்களுக்குள் வழங்கப்படுகிறது.

லஞ்சப் புகார் - வாட்ஸ்அப் எண்

லஞ்சம் வாங்குவதை புகார் செய்ய புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்த உள்ளது, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சட்ட ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிரை தியாகம் செஞ்சு கிடைச்ச சுதந்திரம் மிக சிலருக்கான சுதந்திரமா மட்டும் இல்லாம, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுயமரியாதை, சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்கும் உண்மையான மக்கள் சுதந்திரமா இருக்கணும்ங்கிறது எல்லாரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பா இருக்கு.

தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக்குவோம்

அதை நிறைவேற்ற பொறுப்பும் நம்மளுடையதுதான். தமிழ்நாட்டு மக்களோட இணைந்து, தமிழகத்தை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகவும், உலக அளவில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாய் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2036 ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்திப்பிட நாம உறுதி ஏற்போம்.

அரசோட கூடவே இருங்க

மக்களே, நம்ம கடமை எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லி யாரும் ஒதுங்கி போயிடாதீங்க. இனிமேதான் நீங்க நம்மளோடவே கூடவே இருக்கணும். உறுதியா நம்ம அரசோடு கூட இருக்கணும். அப்பதான் உங்களுக்காக இருக்கிற எல்லா நல்ல திட்டங்களையும் என்னால செயல்படுத்த முடியும்.

எல்லோரும் சேர்ந்து கடமையை செய்வோம்

எட்டு கோடி பேரோட அந்த பிரதிநிதிதான் முதலமைச்சர் பதவி என்று சொல்லுவாங்க, அதனாலதான் சொல்றேன், மக்கள்தான் ஆட்சியாளர்கள். நானு, எல்லாருமே அங்க இருக்கிறவங்க எல்லாருமே மக்களோட செர்வன்ட்ஸ்.

அப்படிதான் நான் அதை பார்க்கிறேன். சோ வாங்க, எல்லாருமா சேர்ந்து நம்ம கடமையை சேர்ந்து செய்வோம்.

எதிரான சக்தி, சதிகளை முறியடிப்போம்

நம்ம அரசுக்கு எதிரான சக்திகளையும் சரி, சதிகளையும் சரி முறியடிப்போம். நீங்க எல்லாரும் நம்மளோட இருக்கும்போது எனக்கு வேற என்னங்க கவலை. நல்லதை மட்டுமே நோக்கி நகர்வோம்.

அப்படி நல்லதை மட்டுமே நோக்கி நகர உங்க அரசு உங்களுடைய எதிர்பார்ப்புகளையும், உங்களுடைய கருத்துக்களையும் மனசுல வச்சுக்கிட்டுதான் நல்ல சில புதிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கிறோம், அதுல ஒரு சிலதை மட்டும் இங்க நான் வந்து படிக்கிறேன்.

நிதியுதவி அதிகரிப்பு

தாய்நாட்டிற்காக தன்னலமற்ற தியாகம் செய்து நமது நாட்டின் பாதுகாப்பிற்காக அரும்பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவி ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து ரூபாய் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 23 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய் ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள், மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பான விழா - அனைவருக்கும் நன்றி

இன்னைக்கு இந்த விழாவில பரிசு வாங்கப் போற, பாராட்டுக்களை வாங்கப் போற, விருதுகளை வாங்கப் போற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிச்சுகிறேன்.

இந்த விழாவை ரொம்ப அழகா ஏற்பாடு செஞ்ச பொதுத்துறை செயலாளர் அவர்களோட சேர்ந்து அலுவலர்களுக்கும், காலையிலேயே இந்த பிராக்டிஸ் பண்ணி சிறப்பான பரேட் நடத்திய காவல்துறையினர் நண்பர்களுக்கும், இந்த விழாவை வந்து பாதுகாப்பா நடத்துற காவல்துறையினர் அதிகாரிகளுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், சமூக ஊடகத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.

கான்ஃபிடென்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம், மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in