தமிழ்நாட்டில் முதலீடு, நிறுவனங்களின் எதிர்பார்ப்பு : முன்னணி நிறுவன உயர் அலுவலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவன உயர் அலுவலர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
Chief Minister Vijay held consultations with top officials of  multinational automobile companies
Chief Minister Vijay held consultations with top officials of multinational automobile companiesgoogle
1 min read

முதல்வர் விஜய் தொடர் ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நிதித்துறை உயரதிகாரிகளுடன் சந்திப்பு

அந்தவகையில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதி துறையின் செயல்பாடுகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட நிதித்துறையை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஏறகனவே ஆலோசனையில் ஈடுபட்டார்.

துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை

இதனை தொடர்ந்து தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டார்.

ஆட்டோமொபைல் நிறுவன உயரதிகாரிகள்

இந்தக் கூட்டத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களை சார்ந்த, பி.எம்.டபிள்யூ, டி.வி.ஸ்., போன்ற மோட்டார் வாகன நிறுவனங்களில் தலைமை செயல் அலுவலர்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.

புதிய முதலீடுகள் - கேட்டறிந்தார்

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புதிய முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாத்திய கூறுங்கள் என்ன? தற்பொழுதையை தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் என்ன என்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.

புதிய முதலீடுகள் வர வாய்ப்பு

மோட்டார் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக, ஆட்டோமொபைல் சார்ந்த பல்வேறு புதிய முதலீடுகளை மாநிலத்தில் கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கவனம் ஈர்க்கும் முதல்வர்

பதவியேற்றதில் இருந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் விஜயின் நடத்தி வரும் இந்தக் கூட்டங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in