’’விருதுகளை வழங்கிய முதல்வர்’’ : தகைசால் தமிழர் விருது எம். கிருஷ்ணசாமி : அப்துல் கலாம் விருது டாக்டர் வி.மோகன்...!

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய், விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
Chief Minister Vijay hoisted the national flag and presented awards to honor individuals
Chief Minister Vijay hoisted the national flag and presented awards to honor individualsgoogle
1 min read

சுதந்திர தினவிழா, முதல்வர் விஜய்

நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) கோட்டையில் கொடி ஏற்றினார். சுதந்திர தின சிறப்புரை ஆற்றிய முதல்வர், பின்னர், சமூகம், அறிவியல், வீரம், நிர்வாகம் மற்றும் பொதுச்சேவை ஆகிய பல்வேறு துறைகளில் தனித்துவமாக சாதனை புரிந்த நபர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

* தகைசால் தமிழர் விருது – காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமி.

* டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது – நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன்.

*கல்பனா சாவ்லா விருது- கோயம்புத்தூரைச் சேர்ந்த நௌஷின் பானு சந்த்

முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்

1. நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா

2. சதீஷ் பாபு குழுவினர் (மெட்ரோ ரயில் நிறுவனம்)

3. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி.

சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்- கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார்

சிறந்த மருத்துவர்- திருநாவுக்கரசு- சென்னை அரசு புனர்வாழ்வு மருத்துவமனை

சிறந்த நிறுவனம்- சிருஷ்டி பவுண்டேஷன் – திண்டிவனம்

சிறந்த சமூக சேவகர் – மணிமாறன்- திருவண்ணாமலை

அதிக மாற்றத்திறனாளிகளை பணியமர்த்திய நிறுவனம் – எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் (திருப்பூர்)

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

மகளிர் நலனுக்காக பணியாற்றிய தொண்டு நிறுவனம் – ஈரோடு அட்சயம் டிரஸ்ட்

மகளிர் நலனுக்காக பணியாற்றிய சமூக சேவகர் -ஓசூர், ராதா

சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்

முதல் பரிசு – ஆறாவது மண்டலம்

இரண்டாம் பரிசு – இரண்டாவது மண்டலம்

சிறந்த மாநகராட்சி

முதல் பரிசு – கோவை

இரண்டாம் பரிசு – தஞ்சாவூர்

சிறந்த நகராட்சி

முதல் பரிசு – போடிநாயக்கனூர்

இரண்டாம் பரிசு – ஆரணி

மூன்றாம் பரிசு- விழுப்புரம்

சிறந்த பேரூராட்சி

முதல் பரிசு- திருவிடைமருதூர்

இரண்டாம் பரிசு- கருங்கல்

மூன்றாம் பரிசு – செட்டிபாளையம்

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in