"சுதந்திர தினம்-80" : ”முதன்முறையாக கொடியேற்றினார் முதல்வர் விஜய்” : முப்படைகள் அணிவகுப்பு மரியாதை..!

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி, முப்படைகளின் அணிவப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
Chief Minister Vijay hoisted the national flag for the first time at the ramparts of Fort St. George in Chennai
Chief Minister Vijay hoisted the national flag for the first time at the ramparts of Fort St. George in Chennai google
1 min read

80வது சுதந்திர தின விழா

நாடு முழுவதும் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை

இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்ற வந்த முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கோட்டை கொத்தளத்தில் விஜய்

கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்

இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தேசிய கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

பொதுமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்

தமிழக அரசின் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார் முதல்வர் விஜய், விழா முடிந்ததும், சென்னை காமராஜர் சாலையில் திரண்டிருந்த பொதுமக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை முதல்வர் விஜய் தெரிவித்துக் கொண்டார்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in