”முதல்வர் விஜய் லண்டன் பயணம்” : முதலீடுகளை ஈர்க்க தொழில்துறையினருடன் சந்திப்பு : அஜித் கார் பந்தயத்தை பார்க்கிறார்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
Chief Minister Vijay is leaving for London tonight to attract foreign investments
Chief Minister Vijay is leaving for London tonight to attract foreign investmentssource:thamizhalai,ai generated
1 min read

வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு

தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

1,21,788 பேருக்கு வேலை

இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் லண்டன் பயணம்

இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்கிறார்.

இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.

முதலீட்டாளர்களுடன் சந்திப்பு

லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் கார் பந்தயத்தை பார்வையிடுகிறார்?

தனது நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்வையிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

லண்டன் தமிழர்களுடன் சந்திப்பு

லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட உள்ளார். இந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக அரசின் உயரதிகாரிகள் ஏற்கெனவே லண்டன் புறப்பட்டு சென்றுள்ளனர்.

செப். 17ம்தேதி சென்னை திரும்புகிறார்

லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு துபாய் வழியாகச் செப்.17-ம் தேதி காலை சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வரான பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in