

போதைப்பொருள் எதிர்ப்பு நாள்
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஸ்டார்ட் Run ஸ்டாப் Drug
இதன் ஒருபகுதியாக பொதுமக்களிடையே போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு மாரத்தான்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்ற விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.
முதல்வர் தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் ஜோசப் விஜய் ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
மாரத்தானில் பங்கேற்ற முதல்வர்
சென்னை மாரத்தானில், பொதுமக்களோடு முதல்வர் விஜயும் பங்கேற்றார்.
அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் உள்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று ஓடினர்.
போதைப்பொருளால் பேராபத்து
போதைப்பொருள் பழக்கத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பொதுமக்களில் ஒரு தரப்பினரிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது.
தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் மக்கள் உள்ளனர்.
குற்றங்களுக்கு அடிப்படை போதைப்பொருள்
பல்வேறு குற்றங்களுக்கு இந்த போதைப்பொருள் தான் முக்கிய காரணமாக உள்ள போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க உலக நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
முதல்வர் விஜய் கருப்பு நிற டீசர்ட், கருப்பு நிற டிராக், கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முதல்வர் விஜய் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்தும், Sports-யை எடு Drug-யை விடு என்ற வாசகத்தை எழுதியும் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டது.
=============================