

தமிழக அரசு பட்ஜெட் ஆலோசனை
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு, இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கான பணிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறது.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, விஜய் அரசோட முதல் பட்ஜெட் இருக்கும் என்று தெரிகிறது.
முதல்வர் விஜய் தொடர் ஆலோசனை
2 வாரங்களாக முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு துறை வாரியாக அமைச்சர்கள், அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வந்தார்.
தமிழக அமைச்சரவை கூட்டம்
இதனைடுத்து இன்று காலை முதலைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை
நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றியும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல் அமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தவெக அரசு ஊழலற்ற நேர்மையான அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லஞ்சம் இல்லாத அரசாக இருக்க வேண்டும்
எனது நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், லஞ்சம் இல்லாத அரசாக இந்த அரசு விளங்கும் எனவும், அதில் உறுதியாக இருங்கள். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தாக கூறப்படுகிறது.
தவறு செய்தால் பதவிப் பறிப்பு
அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால்,தெரிந்தவர், தெரியாதவர் என யாரையும் பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுப்பேன் எனவும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
அமைச்சராக இருந்தாலும் நடவடிக்கை இருக்கும். ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் வீடியோ எடுக்க கூடாது
அடுத்தாக ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல், வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-------------------------