முதல்வர் விஜய் ”நாளை டெல்லி பயணம்” : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு : ஜனாதிபதி, காங். தலைவர்களுடன் சந்திப்பு...!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்கிறார்.
Chief Minister Vijay will be going to Delhi tomorrow to participate in the NITI Aayog meeting
Chief Minister Vijay will be going to Delhi tomorrow to participate in the NITI Aayog meeting google
1 min read

முதல்வரானவுடன் டெல்லி சென்றார்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய், கடந்த மாதம் 27ம் தேதி டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்து விட்டு, மறுநாள் சென்னை திரும்பினார்.

டெல்லி 3 நாட்கள் பயணம்

இந்தநிலையில், 3 நாட்கள் பயணமாக நாளை அவர் டெல்லி செல்கிறார். தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

நிதி ஆயோக் கூட்டம்

வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்களும், கலந்து கொள்கின்றனர். இதில் முதல்வர் விஜய் பங்கு கொள்கிறார்.

தலைவர்களுடன் சந்திப்பு

குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதல்வர் சந்திக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்று இருந்தாலும், கடந்த முறை டெல்லி சென்ற போது யாரையும் முதல்வர் விஜய் சந்திக்கவில்லை.

இந்தமுறை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.

முக்கிய சந்திப்புகள் இருப்பதன் காரணமாக அவரது டெல்லி பயணம் 3 நாட்களாக திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

12ம் தேதி சென்னை திரும்புகிறார்

டெல்லி பயணத்தை நிறைவு செய்துவிட்டு, 12ம் தேதி வெள்ளிக்கிழமை, தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார் முதல்வர் விஜய்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in