

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதல்வர் விஜய் , மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
தனிப்பட்ட குற்றமும் சட்டம் - ஒழுங்கும்
குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வர வேண்டும் என்றும், ஒரு குற்றம் நடந்துவிட்ட என்பதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது என்றும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட குற்றச் சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடந்த பிறகு, அதற்கான பொறுப்பை அரசு மீது மட்டும் சுமத்திவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
குற்றங்களின் பின்னணியும் சமூகக் காரணிகளும்
அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் திடீரெனத் தோன்றியவை அல்ல. ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் குடும்பப் பிரச்சினை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
மேலும், கடந்த காலங்களில் சட்டத்தின் மீது பயமில்லாத சூழல், சிலரின் ஆதிக்கத்தின்கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைக் கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம்,
நிலம் மற்றும் அதிகாரத்திற்கான போட்டி, கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலைதளங்களின் தாக்கம் போன்ற பல்வேறு சமூகக் காரணிகளும் குற்றங்களுக்குப் பின்னணியாக அமைகின்றன.
குற்றத் தடுப்பில் காவல்துறையின் புதிய இலக்கு
கடந்த 2026 ஜூலை 30-ல் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் சுட்டிக்காட்டியபடி, காவல்துறையின் பணி என்பது குற்றவாளிகளைக் கைது செய்வதோடு முடிந்துவிடக் கூடாது.
குற்றம் உருவாகும் சூழலைக் கண்டறிந்து, அந்த குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதைத் தடுப்பதையே காவல்துறை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு காவல் நிலையமும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், கிராமங்கள், வார்டுகள் மற்றும் தெருக்களில் நிலவும் பிரச்சினைகளைக் காவல்துறையினர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
======