முதல்வர் விஜயின் தனிச் செயலாளர்கள் : துறைகள் ஒதுக்கீடு! : துறைகளை அள்ளிய ஐஏஎஸ் அதிகாரிகள்....

முதல்வரின் தனிச் செயலாளர் நான்கு பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Chief Minister's personal secretaries have all been assigned departments
Chief Minister's personal secretaries have all been assigned departmentsgoogle
1 min read

முதல்வர் விஜய் தலைமையில் அரசு

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் தற்போது வரை 9 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களும் துறைகளை கவனித்து வருகின்றனர்.

முதல்வரின் தனிச் செயலாளர்கள்

முதல்வர் விஜயின் முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் ஐஏஎஸ், செயலாளர் 2 ஆக லட்சுமி பிரியா, செயலாளர் - 3 ஆக அண்ணா துரை, கூடுதல் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைகள் ஒதுக்கீடு

இந்த நிலையில் விஜயின் நான்கு தனிச்செயலாளர்களுக்கும் அவர்கள் கவனிக்க இருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

செந்தில் குமார் ஐஏஎஸ்

நிதித் துறை, உள்துறை, கலால், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், ஆற்றல், தொழிற்சாலைகள், முதலீடு, பொருளாதாரம், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலன், லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகளை கவனிப்பார்.

லட்சுமிபிரியா ஐஏஎஸ்

முதல்வர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், முதல்வரின் சுற்றுப்பயணம், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை, சமூகநலன், பெண்கள் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலம், ஆதிதிராவிடர், பழங்குடியின துறை, மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அண்ணாதுரை ஐஏஎஸ்

இயற்கை வளங்கள், நீர் வளம், வேளாண்மை, விவசாயிகள் நலன், கால்நடைத் துறை, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம், கைத்தறி, கைவினை, ஜவுளி, காதி, போக்குவரத்து துறை, சட்டம், சட்டசபை செயலகம், மனிதவள மேம்பாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை ஆகிய 12 துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷ்ணு ஐஏஎஸ்

வணிக வரி, பதிவுத் துறை, சுற்றுலா, கலாச்சாரம், அறநிலையத் துறை, சிறு குறு நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, தொழிலாளர் நலன், திறன் வளர்ச்சி, திட்டம் மற்றும் வளர்ச்சி, சிறப்பு செயலாக்கம், சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நான்கு செயலாளர்களும் முதல்வரின் நிழலாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை கண்காணித்து பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.

================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in