

கிறிஸ்துமஸ் பண்டிகை
State Transport Corporations will operate special buses in addition to regular services for the Christmas festival : இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை, நாளை மறுநாள் ( 25ம் தேதி ) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம்
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் நாளை தொடங்க இருப்பதால், கிறிஸ்துமஸ் விழாவை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்ய வசதியாக, தமிழகத்தில் இன்று முதல் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 255 பேருந்துகளும், நாளை 525 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.
இன்றும், நாளையும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மொத்தம் 91 சிறப்புப் பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள்
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
==================