எல்நினோ உருவாக வாய்ப்பு! : ”செப்டம்பர் வரை கோடைக்காலம்” : ஈரப்பத வெப்பஅலை : காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு தமிழகத்தில் கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
climate researchers warned summer in Tamil Nadu will last until September this year due to El Nino
climate researchers warned summer in Tamil Nadu will last until September this year due to El Nino google
1 min read

இந்தியாவில் வெப்ப அலைகள்

Environmental and climate researchers have warned that summer in Tamil Nadu will last until September this year due to the possibility of El Nino conditions developing : இங்​கிலாந்​தில் உள்ள ரெடிங் பல்​கலைக்​கழகத்​தில் உள்ள அறி​விய​லா​ளர்​கள், இந்​தியா மற்​றும் ஐக்​கிய ராஜ்ஜி​யத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​களு​டன் இணைந்​து, இந்​தி​யா​வின் பரு​வ​மழை காலத்​தில் வரும் “ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்​வாறு இயங்​கு​கின்றன என்​பது குறித்து ஆய்வு மேற்​கொண்டனர்.

சென்னையில் அதிகப்படியான ஈரப்பதம்

சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த ஏர் ஷோவில் ஏற்பட்ட மரணம் மற்றும் பொதுமக்கள் மயக்கமடைய காரணம் முழுக்க முழுக்க காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் என இந்த அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

வானிலை மையங்கள் மூலம் பதிவாகக்கூடிய வெப்பத்திற்கும், மனிதர்கள் உணரக்கூடிய வெப்பத்திற்கும் பெரியளவிலான வித்தியாசம் இருப்பதை இந்த ஆய்வு அறிக்கை விளக்கி உள்ளது.

தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டங்களில் எப்போதும் ஈரப்பதம் அதிகம் நிலவுகிறது. இதனால் பருவமழையும் ஈரப்பத வெப்ப அலையை அதிகரிக்கின்றன.

இந்த ஆண்டு எல்நினோ

இந்தாண்டு எல்நினோ (வழக்கத்டை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வு) தன்மை தமிழகத்தில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

செப்டம்பர் வரை வெப்பம் நீடிக்கும்

எனவே, இந்த கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, நாம் ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி கொள்ள வேண்டும்” என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in