’தமிழ் நம் உணர்வு’ உணர்ந்ததே நமது அரசு : ’தனித்தீர்மானம் குறித்து முதல்வர் பெருமிதம்’ : இந்நாள் நிலைத்திருக்கும்..!

தமிழத்தாய் வாழ்த்திற்கு தனித்தீர்மானம் இயற்றப்பட்டத்திற்கு ஒரு மனதாக அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தத்திற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
CM expresses pride regarding the special resolution on 'Tamil Thai Vazhthu'
CM expresses pride regarding the special resolution on 'Tamil Thai Vazhthu'google
1 min read

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு தனி தீர்மானம்,

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு தனிதீர்மானமானது கொண்டு வரப்பட்டது .

தனி தீர்மானம் குறித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் கூறியதாவது

அரசு நிகழச்சிகளில் தமிழத்தாய் வாழ்த்து படுவத்ற்கு தனி தீர்மானம் சட்டபேரவியில் கொண்டு வந்து முதல்வர் விஜய் பேசியதாவது தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது நமது உயிர், உணர்வு என்றும்

 உணர்வு. தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று பாடியவர் மனோன்மணியம் சுந்தரனார். தமிழ்னா கெத்து, தமிழ்னா பவர் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பது தான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். என்று கூறினார்

அனைத்து கட்சிகளில் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறிய தீரமானம்

இந்த நிலையில் சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளில் ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானமாந்து நிறைவேறியது

தனித்தீர்மானம் குறித்து முதல்வர் விஜய் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.

வரலாற்றில் சிறப்புமிக்க தீர்மானம் , முதல்வர் பெருமிதம்

மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும்

இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்

==============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in