தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் : பேரவையில் கொண்டு வந்த முதல்வர் : 543 தொகுதிகள் படியே 2029 தேர்தல்...

மகளிர் இடஒதுக்கீட்டை மக்கள் தொகை, தொகுதி மறுவரையறையோடு இணைத்து ஒத்தி வைக்க கூடாது என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்
CM moves a special resolution in the Assembly against the delimitation of constituencies
CM moves a special resolution in the Assembly against the delimitation of constituenciesgoogle
1 min read

தொகுதிக்கு மறுவரையறைக்கு எதிராக தனிதீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவர்க்ளால் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனிதீர்மானமானது கொண்டு வரப்பட்டது , குறிப்பாக தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்பதை மாற்றக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் விஜய் கூறியதாவது

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது

வீட்டு பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால் தான் நமது குடும்பத்திற்கு கிடைக்கும். நமது வீட்டு பெண்கள் அரசியலிலும் முன்னேற இடஒதுக்கீடு அவசியமான ஒன்றாகும் , தேர்தலில் ஆண்களை விட பெண்களை அதிகம் வாக்குச் செலுத்தி உள்ளனர் , இது சலுகை அல்ல , சமூக நிதி எனவேமகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகு மகளிர் இடஒதுக்கடு அமல் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டை மக்கள் தொகை, தொகுதி மறுவரையறையோடு இணைத்து ஒத்தி வைக்க கூடாது என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்

தொகுதி மறுவரையறை குறித்து 6 கட்சி எம்.பி-க்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் விஜய் அவர்கள் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கான தொகுதிகள் குறையும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்பதை மாற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்

மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2 : 1 என்ற நிலையிலே இருக்க வேண்டும் .

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய் ,மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2 : 1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை தாமதமின்றி 543 தொகுதி அடிப்படையில் 2029 தேர்தலில் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை , தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் , முதல்வர்

தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்கு பின் நடைபெறும் தொகுதி மறுவரையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்.

மக்களவையில் தற்போதுள்ள எண்ணிக்கையே அப்படியே இருக்க வேண்டும் என தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து இவ்வாறு தெரிவித்துள்ளார் .

===============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in