காவிரியில் உரிமையை விட்டுத்தர மாட்டோம் : மேட்டூர் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : விவசாயிகளுக்கு முதல்வர் அறிவுரை!

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளார்.
CM Vijay categorically assured that Tamil Nadu will not,  yield its legal rights regarding Cauvery water issue
CM Vijay categorically assured that Tamil Nadu will not, yield its legal rights regarding Cauvery water issueAI generated
1 min read

மேட்டூர் அணையை திறந்த முதல்வர்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை அவர் திறந்து விட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மலர் தூவி காவிரியில் நீர் செல்வதை பார்வையிட்ட முதல்வர், அனல்மின் நிலையத்தையும் பார்வையிட்டார்.

காவிரி நீர் - தமிழகத்தின் உரிமை

அணையை திறந்து வைத்த பிறகு முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில்,

”காவிரி நீர் என்பது நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும்.

மேட்டூர் அணை திறப்பு

சம்பா சாகுபடி: காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தீவிரக் கண்காணிப்பு

நீர் திறப்பைக் கண்காணிக்கவும், நீர் திருட்டைத் தடுக்கவும் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு பகலாக ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கு அறிவுரை

எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் குறைந்த நீர் தேவையுள்ள நடுத்தர நெல் ரகங்களையும், நேரடி நெல் விதைப்பு முறையையும் பின்பற்றி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் நீர்ப்பங்கைப் பெறவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு தொடர்ந்து அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in