6 கோட்டங்களுக்கு ”300 புதிய பேருந்துகள்” : முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு : ஓட்டுநர், நடத்துனரை வாழ்த்தி பயணம்...!

6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
Cm Vijay flags off 300 new bus services across six divisions
Cm Vijay flags off 300 new bus services across six divisionsgoogle
1 min read

அரசுப்பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்ரும் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்திபன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்

பேருந்துகள் ஒப்படைப்பு

புதிதாக தொடங்கப்பட்ட சேவையானது சென்னை , கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டு அந்த சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்

பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த முதல்வர்

இந்த பேருந்துகள் அனைத்தும் தொடக்க விழாவுக்காக சில நாள்களுக்கு முன்னதாகவே சென்னை கொண்டுவரப்பட்டன. ஆனால், நிர்வாகக் காரணங்களால் இந்த பேருந்து சேவையானது தொடங்கப்படாமல் இருந்தது

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாழ்த்தி, 29 ஏ பேருந்தில் பயணம்

பேருந்து சேவையை தொடங்கி வைத்து , ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாழ்த்திய முதல்வர் விஜய் ,திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29 ஏ என்ற மாநகரப் பேருந்தில் ஏறி கலங்கரை விளக்கம் வரை நட்த்துனரிடம் பயணச்சீட்டு வாங்கி பயணித்தார்

பேருந்தில் பயணித்து, லவீடியோ எடுத்த முதல்வர்

தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை அந்த பேருந்தில் பயணித்த முதல்வர் ,தந்து செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே நடத்துனரை அருகில் அமர வைத்து கொண்டு பயணித்தார் முதல்வர் விஜய்

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பயணம் நெடுகிலும் , கையசைத்து பயணித்த முதல்வர்

தலைமைசெயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை பயணம் செய்த முதல்வர் , வழி நெடுகிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு கையசைத்தப்படி பயணம் மேற்கொண்டார்

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in