

ஃபோர்டு கார் நிறுவனம்
Ford Motor Company's high-level delegation, led by Vice President Mathew Godlewski, met with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay at the Secretariat in Chennai. Discussions centered on reviving the Maraimalai Nagar manufacturing facility :
ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12, 000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில்தான், இந்த நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது.
இன்ஜின்கள் உற்பத்தி
அதுமட்டுமின்றி, தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3, 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது.
முதல்வர் விஜயுடன் சந்திப்பு
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை, ஃபோர்டு நிறுவன உயர்மட்டக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் அடுத்தகட்ட பணிகள் பற்றி அவர்கள் எடுத்துக் கூறினர்.
தமிழக அரசு முழு ஒத்துழைப்பு - முதல்வர் உறுதி
ஃபோர்டு நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.
உற்பத்தியை தொடங்க அறிவுறுத்தல்
மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப...
ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி, ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் திரு. தீரஜ் தீக்ஷித், முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் திரு. வி. ராஜா விமல குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
====