’விசில் சத்தம் ஓங்கி ஒலிக்கட்டும்’ கேப்டன் தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

கேப்டன் எம்.எஸ். தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, "தமிழ்நாட்டின் விளையாட்டுணர்வில் அன்புக்குரிய பகுதி நீங்கள்" என முதலமைச்சர் விஜய் எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக வாழ்த்தியுள்ளார்.
CM Vijay Heartfelt Birthday Wishes to Captain Cool MS Dhoni
CM Vijay Heartfelt Birthday Wishes to Captain Cool MS Dhonicmotamilnadu
1 min read

CM Vijay Heartfelt Birthday Wishes to Captain Cool MS Dhoni

முதல்வர் விஜய் இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கேப்டன் தோனி பிறந்தநாள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று ( ஜூலை 7) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி , உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

கேப்டன் தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் வாழ்த்துப் பதிவு

தோனியின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள அளவிலான அன்பையும், சிஎஸ்கே விசில் போடு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் முதல்வர் விஜய்யின் வாழ்த்து அமைந்துள்ளது.

அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது

"உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு விசில் சத்தம் முதல், நீங்கள் ஊக்கமளித்த எண்ணிலடங்கா இதயங்கள் வரை, உங்கள் கிரிக்கெட் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டுணர்வில் அன்புக்குரிய பகுதியாக மாறிவிட்டது!

விசில் சத்தம் மேலும் மேலும் ஒலிக்கட்டும்

நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களின் கிரிக்கெட் சாதனைகள், தலைமைப்பண்பு மற்றும் எளிமை குணம் ஆகியவை பல தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களுக்கான விசில் சத்தம் மேலும் மேலும் ஒலிக்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு

முன்னாள் கேப்டன் தோனிக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'தல' என்று தமிழ்நாட்டு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனிக்கு, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் "உங்களுக்கான விசில் சத்தம் மேலும் மேலும் ஒலிக்கட்டும்" என்று வாழ்த்தியிருப்பது கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்களை ஒரே நேரத்தில் உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in