பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
சென்னை பெரம்பூர் தொகுதியில் சர்மா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, முதல்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்கு சென்ற முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார் ,
வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு
அங்கு கையசத்தாவாறும் , மக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டும் , பெரம்பூர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர், மலர்களை தூவி முதல்வரை பெரம்பூர் தொகுதி மக்கள் வரவேற்றனர்
இ சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர்
தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார், ஆய்வினை மேற்கொண்டார்
பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கல்
த்னது சொந்த தொகுதியான பெரம்பூரில் சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.பெரம்பூர் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது
பெரம்பூர் தொகுதிக்கு பிரத்யேக செயலி
தந்து சொந்த தொகுதியான பெரம்பூரில் , மக்களின் குறைகளை கேட்டறியவும் ,புகார்களை தெரிவிக்கவும் , பெரம்பூர் தொகுதி மக்களுக்கென்று மக்கள் சேவை தளம் என்ற மொபைல் செயலியை தொடங்கிவைத்தார்
முதல்வரின் நேரடி கட்டுப்பாடில் இயங்கும் செயலி
பெரம்பூர் மக்களுக்கென்று அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ள இந்த மொபைல் செயலியானது , முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுதெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் பெறப்பட்ட 72 மணி நேரத்தில் நடவடிக்கை
அதனப்டி பதிவு செய்யும் புகார்கள் மீது அடுத்த மூன்று நாட்களுக்குள் அதாவது 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முயற்சி தொகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
========================