

CM Vijay Inaugurates Chennai Development Projects Amazon Sewage Treatment Plant
ரூ.174.97 கோடி மதிப்பிலான 12 திட்டப் பணிகள் திறப்பு
தமிழக முதலவர் விஜய் இன்று (நவம்பர் 18) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் ரூ. 174 கோடியே 97 லட்சம் செலவில் முடிவுற்ற 12 வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
அதன் விவரங்கள்...
பெருநகர சென்னை மாநகராட்சி: ரூ. 97 கோடியே 33 லட்சம் செலவில் முடிவுற்ற பணிகள்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்: ரூ. 73 கோடியே 64 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட திட்டங்கள்.
சென்னை குடிநீர் வாரியம் மற்றும் அமேசான் கூட்டணி: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் (CSR) கீழ் ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
விமான நிலையப் பகுதியில் ரூ.11.15 கோடியில் பசுமை வழித்தடத்திற்கு அடிக்கல்
மேலும், ரூ. 11 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, சென்னையின் நுழைவுவாயிலான சென்னை விமான நிலையப் பகுதியில் உள்ள பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கிண்டி கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரையிலான 5.30 கிலோமீட்டர் நீளத்திற்குப் பசுமை வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
கோட்டூர்புரத்தில் அமேசான் நிறுவனத்தின் முன்னோடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 4 கோடி செலவில் கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாரு...
நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு
தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வழங்கிய 6,000 சதுர அடி நிலப்பரப்பில், பக்கிங்ஹாம் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்குக் கொண்டுவரும் திறன் கொண்டது.
நவீன தொழில்நுட்பங்கள்
Hybrid Anaerobic Reactor, Moving Bed Bio Reactor (MBBR), Multi-grade Filter மற்றும் Ultra Filtration உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்கும், அருகிலுள்ள பூங்காக்கள், சாலையோர செடிகள் மற்றும் மரங்களின் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும்.
10 ஆண்டு பராமரிப்பு மற்றும் சிறப்பு
இத்திட்டத்திற்கான 100 சதவீத மூலதனச் செலவையும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் அமேசான் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக
அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறையாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இத்தகைய முன்னோடி சுத்திகரிப்பு நிலையத்தை அமேசான் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
======