மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்: முதல்வர் விஜய்யின் முழு நேர நிரல் விவரங்கள்!

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கும் நிலையில் அதனைத்தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத் திறப்பு, மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் உள்ளிட்ட முழு விவரங்கள்.
'Thai Maman Thanga Mothiram'
'Thai Maman Thanga Mothiram'source:thamizhalai,ai generated
2 min read

CM Vijay Madurai Visit: 'Thai Maman Thanga Mothiram' Scheme Launch & Schedule

மதுரை வருகை மற்றும் திட்டத் தொடக்க விழா

தமிழக முதல்வர் விஜய் இன்று (செப். 28) மதுரையில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில், முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

ஆரம்பத்தில் உசிலம்பட்டியிலும், பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனை தாய்-சேய் வார்டிலும் நடத்தத் திட்டமிடப்பட்ட இவ்விழா, நோய் தொற்று பரவலைத் தவிர்க்கும் பொருட்டு திடீரென மருத்துவமனை கூட்டரங்கிற்கு மாற்றப்பட்டது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - சிறப்பம்சங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

2026-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறப்பு

தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, ரூ. 10.25 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர், அங்குள்ள காந்தியின் இரத்தம் தோய்ந்த ஆடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை நேரில் பார்வையிடுகிறார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மற்றும் சென்னை திரும்புதல்

நிகழ்ச்சிகளுக்குப் பின் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு விமான நிலையம் புறப்பட்டு, மாலை 6 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

5 ஆயிரம் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு

முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நகரின் முக்கியச் சாலைப் பகுதிகள் வரை இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல, மாசி வீதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in