”3 கோடிக்கு திட்டம், 1,000 கோடியில் சிறப்பு திட்டங்கள்” : முதல்வர் விஜய் கடிதம் : பெரம்பூரில் வரப்போகும் மாற்றங்கள்!

பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வசதிகளை கொண்டு வர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
CM Vijay  written letter to Chennai Corporation Commissioner  provision of various amenities in  Perambur constituency
CM Vijay written letter to Chennai Corporation Commissioner provision of various amenities in Perambur constituencyAI generated
1 min read

2 தொகுதிகளில் விஜய் வெற்றி

சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், முதல்வராக பொறுப்பேற்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த அவர், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

பெரம்பூர் எம்எல்ஏவாக தொடர்கிறார்

பெரம்பூர் எம்எல்ஏ என்கிற அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு, முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில் பல்வேறு வசதிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய இடங்களில் சிசிடிவி வசதி

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர் (2 இடங்கள்), எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் CCTV கேமரா, Wi-Fi வசதி

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இணைப்புடன் 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.

விளையாட்டு வளாகம்

மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ.25 லட்சம் செலவில் கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பிட்ச்கள், கபடி மைதானம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. புதிய விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட உள்ளன.

டயாலிசிஸ் மையம்

சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 'தற்காலிகப் பணியாளர்களுக்கான' (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்

கல்லூரியில் நூலகம், பயிலரங்கம்

அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும்.

அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.

மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் பரிந்துரைத்துள்ளார்.

1,000 கோடியில் புதிய திட்டங்கள்

இதுமட்டுமின்றி பெரம்பூர் தொகுதியில் ரூ.1,013 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு

அனைத்து பணிகளையும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பாக 22 திட்டங்களுக்கு - ரூ.211 கோடி

வீட்டு வசதி மேம்பாடு தொடர்பாக 3 திட்டங்களுக்கு ரூ.544 கோடி

குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பாக 9 திட்டங்களுக்கு ரூ.88 கோடி

பொது பயன்பாட்டு வசதிகள் தொடர்பாக 11 திட்டங்களுக்கு ரூ.160 கோடி

திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி தொடர்பான 5 திட்டங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in