
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் :
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே கருணாநிதி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது பயன்பாட்டு இடம் உள்ளது இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுதந்திர தினம் பொங்கல் விழா போன்ற விழாக்களை கொண்டாடுவது வழக்கம். பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் மாநகராட்சி பெயர் பலகை பொருத்தப்பட்டு சுற்றியும் கம்பி வேலி போடப்பட்டு உள்ளது.
அபகரிக்க முயன்ற திமுக பிரமுகர் :
இந்நிலையில் மாநகராட்சி இடம் என பெயர் பலகை உள்ள இடத்தில், திமுகவை சேர்ந்த தளபதி சுரேஷ் என்பவர் சுவர் கட்டுவதற்காக கட்டுமான பொருட்கள் மற்றும் பணியாட்களுடன் இன்று காலை வந்தார். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த இடத்திற்கான பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்களை மிரட்டிய திமுக நிர்வாகி :
எனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் தெரியும் என மிரட்டல் தொனியில் பேசியதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது, பாதுகாக்கப்பட்ட பகுதி என விளக்கம் அளித்தனர்.
திமுக நிர்வாகி தப்பியோட்டம் :
திமுக பிரமுகரின் அடாவடித்தனத்தால் பொங்கி எழுந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். இதைப்பார்த்து அச்சமடைந்த திமுக பிரமுகர் சுரேஷ்(DMK Suresh), பணியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்களுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
மக்கள் எதிர்ப்பால் தப்பிய அரசு இடம் :
பொதுமக்கள் எச்சரிகையுடன், சமயோசிதமாக செயல்பட்டதால், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால், கட்டுமான பணிகளை மேற்கொண்டு இந்த இடத்தை திமுக நிர்வாகி அபகரித்து இருப்பார் என்பது மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
====