கோவை மாணவி வன்கொடுமை வழக்கு : ”3 பேரும் குற்றவாளிகள், சாகும்வரை ஆயுள்” : மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய 3 பேரும் குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 Coimbatore Mahila Court three accused involved  gang rape case Coimbatore life imprisonment until death.
Coimbatore Mahila Court three accused involved gang rape case Coimbatore life imprisonment until death. google
1 min read

குற்ற பின்னணி

கோவை பீளமேட்டில் தா ஆண்நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி 3 நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன்(21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி(20) உள்ளிட்ட 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு

அதன்படி குற்றாவளிகள் மூவர் 250 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 72 பேரிடம் சாட்சி விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 27ம் தேதி முடிவடைந்தது இன்று இறுதி தீர்ப்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது .

மூவரும் குற்றாவளிகள் :சாகும் வரை ஆயுள்தண்டனை

மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . குற்றத்தில் தொடர்புடைய கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றாவளிகள் என உறுதி செய்து சகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in