அரசியலில் கவனம் தேவை, திருமாவளவன் கருத்து
ஒரு கட்சி கூட்டணியில் வென்று, இன்னொரு கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பலரும் விசிகவை வை விமர்சித்து வரும் நிலையில் ,
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் திருமாவளவன் தயங்கித்தான் இந்த முடிவை எடுத்தோம். எங்களுக்கு பதவியில் நாட்டம் இல்லை. இந்த தேர்தலில் சாதி, மதம், பணத்தால் திமுக, அதிமுக அணிகள் தோற்கடிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்
வஞ்சம் நிறைந்த அரசியல் சூழலில் நாம் கவனமாக இருக்க வேண்டும்
திராவிட இயக்க அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரப்பப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற வெறுப்பு அரசியல் பரப்பப்பட்டு கொண்டுதான் இருக்கிறது
திமுக, அதிமுக இரு துருவங்களாக ஆகிவிட்ட பிறகும் இரு கட்சிகளுக்கும் எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது. துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த இந்த அரசியலில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்
பாஜாக வந்து விடக்கூடாது என்பதற்காக தவெகவை ஆதரித்தோம்
தேர்தலுக்கு முன்பு தவெகவை நாங்கள் விமர்சனம் செய்தோம். தேர்தலுக்குப் பிறகு எங்களை நாடி வந்தபோது ஆதரவளித்திருக்கிறோம். பாஜாகவை தமிழ்நாட்டில் எந்த சூழ்நிலையிலும் உள்ளே வர ஒருப்போதும் அனுமதிக்கமாட்டோம், இந்த காரணத்தாலே தவெகவிற்கு ஆதர்வு அளித்தோம் என்று தெரிவித்துள்ளார்
அண்ணாமலை அரசியல் வருகை , ஆர்எஸ்எஸ் முகமூடி
அண்ணாமலையின் அரசியல் வருகை குறித்து பேசிய திருமாவளவன் , அரசு பதவியை விட்டு விலகுவதற்கு தான் அனுமதி கடிதம் கொடுத்து விட்டு வர வேண்டும். ஆனால், அரசியல் கட்சியில் இருந்து வெளியேற அந்த நிலை இல்லை.
ஆனால், அண்ணாமலை அந்த கட்சியை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறார். அவர் பாஜாகவின் முகமாக இருந்து விடக்கூடாது என்று
அண்ணாமலை அரசியலுக்கு வருவது இங்கு பிரச்னை இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் முகமூடியுடன் வருவதுதான் இங்கு பிரச்சனை. மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டில் நடந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறோம் என்று தெரிவித்தார்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
திமுக, அதிமுக இரு துருவங்களாக பிளவுப்பட்ட பிறகும் இரு கட்சிகளுக்கும் எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது,
இந்த வஞ்சகம் நிறைந்த அரசியில் சூழலில் நாம கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பரப்பரப்புடன் தெரிவித்திருகிறார்.
================