

Communist Party (Marxist) has urged that the lands acquired for the Parandur airport be returned to the farmers
பரந்தூர் - விளை நிலங்கள் கையகப்படுத்தல்
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க, அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான தொகை வழங்கப்பட்டது. சுமார் 1,700 ஏக்கர் விளை நிலங்கள் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டது.
பரந்தூர் விமான நிலையம் - கைவிட்ட அரசு
விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த தவெக அரசு, அதற்கு பதிலாக வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது.
மாற்றுத் திட்டங்களுக்கு விளை நிலங்கள்
பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
தவெக அரசு முடிவு - மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
இதற்கு தவெக அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருக்கிறது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,
விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
அரசு சட்ட விரோதமாக நடக்க கூடாது
வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
===========