”அரசு அலுவகங்களில் NO லஞ்சம்” : புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் : 24 மணி நேரமும் கண்காணிப்பு, கை நீட்டினால் வேலைபோகும்.!

அரசு அலுவலங்களில் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையாக, புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்ணை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.
completely eradicate bribery in government offices, TN govt announced  WhatsApp number for lodging complaints
completely eradicate bribery in government offices, TN govt announced WhatsApp number for lodging complaintsAI generated
1 min read

பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கரூர் சுற்றுப்பயணத்தின் போது அம்மாவட்ட மக்கள் முன்பு பேசுகையில், "உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாதுனு சொல்லிடுங்க. நான் இருக்கேன் உங்களோட.

லஞ்சம் கொடுக்க முடியாது

அப்படியே யாராவது Force பண்ணாங்கனா, இது எங்க மகன், எங்க புள்ள, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சினு Strongஆ சொல்லுங்க.

மக்களே நீங்க கூட இருக்கும் போது, லஞ்சம் ஊழல் மட்டுமில்ல. அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடுற யாரா இருந்தாலும் அடங்கிடுவாங்க" என்று முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார்.

அதை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்

அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக 94981 80936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம்

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு dvac@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

தபால் மூலமும் அனுப்பலாம்

தபால் மூலமாக புகார்களை அனுப்ப DVAC, No.293, MKN Road, Alandur, Chennai 600016 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை

இதுதொடர்பாக அனைத்து அரசு துறைகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அறிவிப்பு பலகையில் தகவல் எண்கள்

லஞ்சம் தொடர்பாக புகார் தெரிவிக்க அறிவிப்பு பலகையில் தொலைபேசி எண்களை ஒட்டி வைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து பொது இடங்கள், அரசு அலுவலகங்களிலும் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கெடுபிடி

புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு என்பது முதல் படி. இன்னும் போக போக கெடுபிடிகள் அதிகரிக்கும். கடந்த ஆட்சிகளை போல இனிமேல் நடந்து கொள்ள முடியாது.

லஞ்சம் வாங்கினால் வேலை போகும்

லஞ்சம் வாங்கினால் அரசு வேலைக்கு குட்பை சொல்லி விட வேண்டியது தான் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் விஜய் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தனது உத்தரவு சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in