அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு : முதல்வர்கள் விஜய், டி.கே.சிவக்குமார் சந்தித்து பேச திட்டம்?

சென்னையை அடுத்த கோவளத்தில் அமித் ஷா தலைமையில் நடைபெறும் தென்னக மண்டலக் குழு மாநாட்டில் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
Southern States Chief Ministers' Conference: Plan for a meeting between Chief Ministers Vijay and D.K. Shivakumar?
Southern States Chief Ministers' Conference: Plan for a meeting between Chief Ministers Vijay and D.K. Shivakumar?source:google
1 min read

Southern States Chief Ministers' Conference: Plan for a meeting between Chief Ministers Vijay and D.K. Shivakumar?

கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு

சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தென்னக மண்டலக் குழு மாநாடு இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 19, 20) நடைபெறுகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்கள்

தென் மாநிலங்களுக்கு இடையேயான முக்கியப் பிரச்சினைகளான நதிநீர் பங்கீடு, எல்லை சிக்கல்கள், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆகியவை குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும், முதல்வர் விஜய் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பங்கேற்கும் தென்மாநிலத் தலைவர்கள்

இம்மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதர மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு - கர்நாடக முதல்வர்கள் இருதரப்புச் சந்திப்பு

மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 20 மாலை தமிழக முதல்வர் விஜய்யும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரும் தனியாக சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பில் இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காவிரி நீர்ப் பிரச்சினை மற்றும் மேகதாது அணை கட்டும் விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் பின்னணி

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூருவில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், கர்நாடகாவில் வெடித்த போராட்டங்கள் காரணமாக அச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு, "தமிழக முதல்வர் இப்போது பெங்களூரு வர வேண்டாம்" எனக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது கோவளத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரு மாநில நதிநீர் விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in