"TVK No, திமுகவுடன் தான் கூட்டணி" : திடமான முடிவில் காங்கிரஸ்

TVK Congress Alliance : தவெகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியிருக்கிறார்.
Congress leader Girish Chodankar denied, no allaince talks with TVK, holding talks with only DMK
Congress leader Girish Chodankar denied, no allaince talks with TVK, holding talks with only DMKINC
1 min read

தமிழக காங்கிரஸ் கமிட்டி

Girish Chodankar on TVK Congress Alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தமிழக வெற்றிக் கழகம் பக்கம் சாயுமா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி, நடிகர் விஜயை சந்தித்து புகைச்சலை கிளப்ப, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அழிவின் பாதையில் தமிழக காங்கிரஸ் செல்வதாக தன பங்கிற்கு கொளுத்தி போட்டு, புயலை கிளப்பி இருக்கிறார்.

சென்னையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

இந்தச் சூழலில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்திருக்கிறார். சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

தவெகவுடன் பேச்சுவார்த்தை இல்லை

தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் தகவல் வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கி சுமுகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை விரைவில் இறுதி செய்வோம்.

எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தன்மை வாய்ந்தது. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை விரும்பும்.

ஜோதிமணி புகார் - விசாரணை

எம்.பி ஜோதிமணி கூறிய புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் 5 ஆயிரம் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம். மதிமுக நடத்திய நடைபயண தொடக்க விழாவில் கலந்து கொள்ளாதது எங்கள் கட்சியின் முடிவு. அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in