தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும் : மாணிக்கம் தாகூர்!

தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
Congress MP Manickam Tagore has criticized that some people need to be taught a lesson to protect one's self-respect.
Congress MP Manickam Tagore has criticized that some people need to be taught a lesson to protect one's self-respect.Google
2 min read

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி

Congress MP Manickam Tagore Twitter : திமுக- காங்கிரஸ் கூட்டணி மோதல் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியான, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் துணையோடு எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சிகளை கூட்டணி கட்சிகளோடு, முழுமையாக பலப்படுத்தும் முழு முயற்சியில் இறங்கி வலுப்படுத்தி வருகின்றன.

இதில் தற்போது தமிழக அரசை நிர்வகிக்குமம் திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய வேண்டும் என பேசி வருகிறார்கள். இதற்கு ஏற்ப விஜய்யை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

சமூகவலைதளத்தில் மோதிய திமுக-காங்கிரஸ்

திமுகவின் கூட்டணி கட்சிகள் பலரும் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, திமுகவிற்கே எதிரான விமர்சன கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க தொடங்கியுள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் நேரடியாகவே ஆட்சியில் பங்கு கேட்டு வந்தார்.

மேலும் கடந்தமுறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் இந்த நிபந்தனையை திமுக தலைமை ரசிக்கவில்லை. அதேநேரம் கூட்டணிக்குள் எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என அமைதி காத்து வந்தது. ஒரு கட்டத்தில் திமுக- காங்கிரஸ் நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் மோதிக்கொண்டனர்.

சீட்டே கொடுக்ககூடாது என்று வாதிட்ட தளபதி

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைக்க அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் ஆட்சியில் பங்கு தொடர்பான கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறி திருப்பி அனுப்பி வைத்தது. மேலும் ஆட்சியில் பங்கு தொடர்பாக எதுவும் பேசக்கூடாது எனவும் மேலிடம் உத்தரவிட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லை இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார். மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

மாணிக்கம் தாகூர் விமர்சனம்

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிக்கு 3000 முதல் 4000 ஓட்டுதான் இருக்கிறது. அந்த கட்சியில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லையெனவும் விமர்சித்திருந்தார். மதுரை வடக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கனும் இதன் காரணமாக கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளான இருகட்சிகளுக்கிடையிலும் கடும்போர் மூண்டுள்ள நிலையில், இருகட்சிகளுக்குமான தமிழக அரசியில் நகர்வ எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in