கூட்டணி ஆட்சி? ஒரு கட்சி ஆட்சி? : மக்கள் கையில், மாணிக்கம் தாகூர்

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை என்ற முதல்வரின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
Congress MP responds to Chief Minister speech
Congress MP responds to Chief Minister speechsource:google
2 min read

தமிழக அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் திமுக, காங்கிரஸ் இடையிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி குறித்தான சில சர்ச்சைகள் நிலவி வருகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் ஆசை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சார்ந்த ஒரு தரப்பினர் திமுகவுடனான் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

திமுக-காங்கிரஸ் சலசலப்பு

மேலும் தொகுதி பங்கீடு முதலானவை குறித்து பேசுவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திமுக பேச்சுவார்த்தைக்காக முப்பத்தாறு நாட்களாக காத்திருப்பதாகவும் காங்கிரம் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியிருந்தார்.

இதனால் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே சலசலப்புகள் இருந்து வந்தது.

திமுக ஏற்பு

காங்கிரம் எம்.பி. மாணிக்கம் தாகூரின் பேச்சைத் தொடர்ந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் 22ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திமுக அறிவித்திருக்கிறது.

ஒருகட்சி ஆட்சி - முதல்வர் உறுதி

இந்நிலையில், சென்னையில் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலை திமுக- காங்கிரஸ் இணைந்துதான் சந்திக்கும் என்றும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை என்றும் இது எங்களை விட காங்கிரஸ்க்கு நன்றாகவே தெரியும் என்றும் பேசினார்.

ஆட்சியில் பங்கு - முற்றுப்புள்ளி

இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு , தொகுதி பங்கீடு என்ற காங்கிரசின் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதனால் இனி காங்கிரசார் ஆட்சியில் பங்கு என்பது குறித்து பேச முடியாத நிலையே உள்ளது.

முதல்வருக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி

இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

”மக்கள் முடிவு செய்வார்கள் .

கூட்டணி ஆட்சியா்?

அல்லது

ஒரு கட்சி ஆட்சியா என்பதை .

2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என்று பதிவிட்டுள்ளார்.

2006 நடந்தது என்ன ?

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஆட்சி அமைக்க 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவளித்தது. 5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை தந்த காங்கிரஸ், திமுக சுமூகமாக ஆட்சி நடத்த உதவியாக இருந்தது. இதை சுட்டிக்காட்டி தான் தற்போது மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் சலசலப்பு

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை, இது எங்களை விட காங்கிரஸ்க்கு நன்றாகவே தெரியும் என முதல்வரின் பேச்சுக்கு , காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் விளக்கம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் முதல்வர் பேச்சுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை இதற்கு எதிர்வினை ஆற்றினால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என செய்தியின் முதல்படியாக அது இருக்கும்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in