”ஆட்சியில் பங்கு or தவெகவுடன் கூட்டணி” : காங்கிரஸ் இன்று முடிவு

திமுக ஆட்சியில் பங்கா?, தவெக உடன் கூட்டணியா? என்பது பற்றி, தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து காங்கிரஸ் இன்று முக்கிய முடிவினை எடுக்க உள்ளது.
Congress take an important decision today after consulting with Tamil Nadu executives, to contiune in dmk alliance or alliance with TVK
Congress take an important decision today after consulting with Tamil Nadu executives, to contiune in dmk alliance or alliance with TVK
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

Congress take an important decision today after consulting with Tamil Nadu executives, to contiune in dmk alliance or alliance with TVK : தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறி​விப்​பு, வரும் பிப்​.3-வது வாரத்​தில் வெளி​யாகும் எனத் தெரிகிறது. ஏனவே, தமிழகத்​தில் உள்ள முக்கிய கட்​சிகளான திமுக, அதி​முகதேர்​தலை எதிர்​கொள்​வதற்​கான திட்​ட​மிடல் மற்​றும் கூட்​டணி தொடர்​பாக முழு வீச்சில் பணி​யாற்றி வரு​கின்​றன.

ஆட்சியில் பங்கு - காங்கிரஸ் போர்க்கொடி

இந்நிலை​யில் திமுக கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸ் கட்சியில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற குரல் சத்தமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. முதலில் சமூக வலை தளங்களில் பதவிடப்பட்ட கருத்துகள், தற்போது எம்பிக்கள் வரை நேரடியாக பேசுவது, ட்விட்டரில் பதிவிடுவது என நீள்கிறது.

அதிருப்தியில் திமுக தலைமை

இதுபோன்ற நடவடிக்​கை​யால் திமுக தலைமை அதிருப்தியில் உள்​ளது. அதே நேரத்​தில், எந்த கட்​சி​யா​வது ஆட்​சி, அதி​காரத்​தில் பங்கு வேண்​டாம் என சொல்​லுமா என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரின் கருத்தை எப்​படி புறந்​தள்​ள முடி​யும் என காங்​கிரஸார் கேள்வி எழுப்​பு​கின்​றனர்.

சோனியா, ராகுல் ஆலோசனை

இந்தச் சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது. சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, அகில இந்​திய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே ஆகியோர் தலை​மை​யில், தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், அகில இந்​திய செய​லா​ளர்​கள் சூரஜ் ஹெக்​டே, நிவே​தித் ஆல்வா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழக தலைவர்கள் பங்கேற்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் எம்பிக்கள் 10 பேர், எம்எல்ஏக்கள் 17 பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்கிறார்கள்.

அதிக இடங்களா? புதிய கூட்டணியா?

இந்தக் ​கூட்​டத்​தில், திமுக கூட்​ட​ணி​யில் அதிக இடங்​கள், ஆட்​சி​யில் பங்கு கேட்க வேண்​டும் என்று பெரும்​பாலான தலை​வர்​கள் வலி​யுறுத்த இருப்பதாக தெரிகிறது. அதற்கு, திமுக ஒப்புக் கொள்ளாவிட்டால், தவெக​வுடன் கூட்​டணி வைக்க வேண்​டும் என்று அவர்கள் தெரிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

காங்கிரசில் மாறுபட்ட கருத்து

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் மட்டுமே திமுக கூட்டணியில் தொடர விரும்புவதாகவும், எம்பிக்களில் பெரும்பாலானோர் தவெக கூட்டணிக்கு செல்வதன் மூலமே கட்சியை அடுத்தநிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

19ம் தேதி சென்னையில் ஆலோசனை

இந்தக் கூட்​டத்​தில் எடுக்​கப்​படும் முடிவு​களை தெரிவிக்க 19-ம் தேதி பொதுக்​குழு, செயற்​குழு சென்னையில் கூடுகிறது. இதில் தேர்​தல், கட்சி வளர்ச்​சி,குறித்​து ஆலோ​சனை நடத்தப்பட உள்ளது.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in