தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் : தனித் தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு..!

தொகுதி மறுவரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Constituency delimitation must be carried out without causing any adverse impact on Tamil Nadu: AIADMK opposes
Constituency delimitation must be carried out without causing any adverse impact on Tamil Nadu: AIADMK opposesgoogle
1 min read

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அவர்க்ளால் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனிதீர்மானமானது கொண்டு வரப்பட்டது , குறிப்பாக தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்பதை மாற்றக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம், அதிமுக எதிர்ப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , கூறும்போது 7.18 சதவீதம் என்ற விகிதாச்சாரம் குறையக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கிறார் .

தமிழ்நாட்டுக்கான விகிதாச்சாரம் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாகவும் ,தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சட்டப்பேரவியில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் மறுவரையறை செய்வதில் தவறு இல்லை' என தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறி அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி

தொகுதி மறுவரையறை, எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனிதீர்மானத்திற்கு எதிராக பாமக அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் , ஆதரவாக திமுக ,விசிக ,இந்தியன யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

===================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in