36 தொகுதிகள் + ஆட்சியில் பங்கு... : திமுகவை நெருக்கும் காங்கிரஸ்

ஆட்சியில் பங்கு, 36 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதால், திமுக கூட்டணியில் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
crisis in the DMK alliance is increasing as Congress demands 36 seats for a share in the government
crisis in the DMK alliance is increasing as Congress demands 36 seats for a share in the governmentGoogle
2 min read

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை படிப்படியாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தவெகவை ஆரம்பித்தது, தமிழக அரசியல் களத்தில் கணக்குகளை மாற்றி அமைக்க தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே இருந்த நிலையில், விஜயின் வருகை மற்ற கட்சிகளுக்கு புதிய வழியை திறந்து விட்டு இருக்கிறது.

திமுக, அதிமுக - விஜய் அதிரடி

திமுகவுக்கும் தங்களுக்கும் தான் போட்டியே, வேறு யாரும் களத்தில் இல்லை என்று அதிரடி காட்டி வருகிறார் விஜய். சிறுபான்மை வாக்குகள் அவர் பக்கம் போக வாய்ப்பு இருப்பதால், திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசும் விஜய், அதிமுக வாக்குகளையும் தன் பக்கம் இழுக்க தூண்டில் போடுகிறார்.

காங்கிரசை இழுக்கும் விஜய்

விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் லட்சக் கணக்கில் குவிந்து வருவது, ‘டெல்லி’ வரை கவனம் பெற்று விட்டது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்புகிறார்.

காங்கிரசிலும் ’விஜய்’ குரல்

இதற்கான முயற்சிகளை தவெக முன்னெடுத்து வருகிறது, விஜய் தந்தை சந்திரசேகர், ‘காங்கிரசுக்கு நேரடியாகவே அழைப்பும்’ விடுத்தார். காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றோரும், தவெகவுடன் செல்லவே விரும்புகின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களில் சுமார் 75 பேர் விஜயை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு அருமையான வாய்ப்பு

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்கு 70 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கேரளா, புதுச்சேரி தேர்தலிலும் விஜயின் செல்வாக்கு காங்கிரசுக்கு ஆதாயம் தேடித்தரும். தென் மாநிலங்களில் முழுமையாக கால்பதிக்க காங்கிரசுக்கு இப்போது மீண்டும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

கூட்டணி தக்கவைக்க திமுக தீவிரம்

ஆனால், காங்கிரஸ் கூட்டணி போவதை திமுக ஒருபோதும் விரும்பாது. எனவே தான், காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்களுக்கு திமுக தலைமை நேரடியாக இதுவரை பதிலடி எதுவும் கொடுக்கவில்லை. தற்போதுள்ள கூட்டணியை அப்படியே தக்க வைக்க வேண்டும் என்பதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

காங்கிரசின் ஐவர் குழு

இந்த நிலையில்தான் திமுக தலைமையிடம் நேரடியாக பேச காங்கிரஸ் மேலிடம் திடீரென ஐவர் குழுவை அமைத்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இந்த குழுவில் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டாலினுடன் காங்கிரஸ் குழு ஆலோசனை

அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். திமுக தரப்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

36 தொகுதிகள் - காங்கிரஸ் டிமாண்ட்

‘‘இம்முறை குறைந்தது 36 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும்’’ என்று அந்த குழு வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், காங்கிரசுக்கு சாதகமானதாக கருதப்படும் 125 தொகுதிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து 39 தொகுதிகளின் பட்டியலையும் திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஆட்சியில் பங்கு என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. தவெகவுக்கு சென்றால், கூடுதல் தொகுதிகள் + ஆட்சியில் பங்கு உறுதி என்பதால், காங்கிரஸ் தெம்புடன் காத்திருக்கிறது.

திமுக கூட்டணியில் சிக்கல்

கடந்த சட்டமன்ற தேர்தலில் ( 2021) திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் தான் போட்டியிட்டது. இம்முறை 11 தொகுதிகளை அதிகம் கேட்கிறது. திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

திமுக கூட்டணியில் சிக்கல்

காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால், மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும். இது கூட்டணிக்குள் பெரிய சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் அரசியர் விமர்சகர்கள்.

காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள்

இந்நிலையில் காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பொன்னேரி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர்....

கே.வி.குப்பம், கலசப்பாக்கம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஓமலூர், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஊட்டி, சூலூர், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம்...

அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், மதுரை தெற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தெரிகிறது.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in