வங்கக்கடலில் உருவாகும் ‘அர்னாப்’ புயல்! : அக்டோபர் 28ல் ஆந்திராவில் கரையை கடக்கிறது..!

பலத்த காற்று மற்றும் மழை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சிரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் ...
Cyclone Arnab to Hit Andhra Pradesh on October 28; Heavy Rain Alert for Tamil Nadu
Cyclone Arnab to Hit Andhra Pradesh on October 28; Heavy Rain Alert for Tamil Nadu
1 min read

உருவானது அர்னாப் புயல் :

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் அக்டோபர் 28-ம் தேதி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘அர்னாப்’ புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் :

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 24-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பின்னர் அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த அமைப்பு அக்டோபர் 26-ம் தேதி புயலாகவும், அக்டோபர் 27-ம் தேதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 28-ல் ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்பு :

இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா விசாகப்பட்டினம் இடையே அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு :

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கேரளப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது.

இதன் காரணமாக கேரளா வழியாக வட தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 26-ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 27-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in