DA Hike 2025: தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி : 58% ஆக அதிகரிப்பு

DA Hike For Tamil Nadu Government Employees 2025 : தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
DA Hike 2025 Order issued to increase dearness allowance by 3 percent for Tamil Nadu government employees
DA Hike 2025 Order issued to increase dearness allowance by 3 percent for Tamil Nadu government employees
1 min read

அகவிலைப்படி உயர்வு

DA Hike For Tamil Nadu Government Employees 2025 : மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

களப்பணியாற்றும் அரசு ஊழியர்கள்

மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி

அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

அகவிலைப்படி 58% ஆக உயர்வு

இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

அரசுக்கு ரூ.1,829 கோடி செலவு

இதனால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,829 கோடி செலவாகும். அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in