

குவளையில் தண்ணீர் வேண்டாம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் விஜய் பிறந்தநாளில் இந்த மாமன்றத்திற்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அதாவது அவை பணியாளர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் டம்ளரில் தண்ணீர் வைத்து வருகிறார்கள்.
வாட்டர் பாட்டில் கொடுத்தால் நன்று
இதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. அந்த டம்ளரில் தண்ணீரை கொண்டு வருவதும் பிறகு அதை திரும்ப கொண்டு செல்வதும் என அவர்களுக்கு இருக்கும் பணிகளுக்கு மத்தியில் இந்த பணியையும் செய்கிறார்கள்.
இன்று டெக்னாலஜி எவ்வளோ முயன்றுவிட்டது. எனவே ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வாட்டல் பாட்டில் கொடுத்து விட்டால் அவர்கள் அவர்களது பணியை பார்ப்பார்கள்” என்றார்.
ஓபிஎஸ் எதிர்ப்பு, தண்ணீர் பாட்டில் வேண்டாம்
அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், "அண்ணியார் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த கருத்து ஏற்புடையதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
பேரவையில் சிரிப்பலை
ஏனென்றால் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடிக்க வாய்ப்பிருக்கிறது" என கூறியதால் அவையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஓபிஎஸ்சை கலாய்த்த தங்கம் தென்னரசு
அப்போது குறுக்கிட்ட தங்கம் தென்னரசு, "ஒரு வேளை அவருடைய (ஓபிஎஸ்) தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக தண்ணீர் பாட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்" என தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அப்போதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
அதிமுக பொதுக்குழுவில் பாட்டில் வீச்சு
2022ல் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் தரப்பினர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.
2022 ஜூன் 23 அன்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அரங்கேறியது. அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தமிழ்நாடு சட்டசபையிலும் விவாதப் பொருளாக மாறி சுவராஸ்யத்தை ஏற்படுத்தியது.
===============