AC Electric Buses - சென்னையில் முதல் முறையாக : சேவை தொடக்கம்

MTC AC Electric Buses Launch in Chennai : சென்னையில் முதல் முறையாக, ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Deputy CM Udhayanidhi Stalin Inaugurates MTC AC Electric Bus Launches in Chennai
Deputy CM Udhayanidhi Stalin Inaugurates MTC AC Electric Bus Launches in Chennai
1 min read

மின்சார பேருந்து சேவை :

MTC AC Electric Buses Launch in Chennai : சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தாலும், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் வசதிக்காக சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏசி மின்சார பேருந்துகள் அறிமுகம் :

அதன்படி, சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை(AC Electric Bus Service in Chennai) தொடங்கப்பட்டு இருக்கிறது. 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மின்சார சார்ஜிங் பாயிண்டுகள் :

பெரும்பாக்கம் பணிமனையில் இந்த சேவையை அவர் தொடங்கி வைத்தார். 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான பெரும்பாக்கம் பணிமனை(Perumbakkam Bus Depot) பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சென்னையில் மின்சாரப் பேருந்துகள் : வழித்தடங்கள் விவரம்

625 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் :

இதையடுத்து சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டீசலில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார பேருந்துகள் சென்னையில்(Electric Bus in Chennai) இயக்கப்படுகின்றன. 5 பணிமனைகள் மூலம் 625 மின்சார பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in