

கோவில் பிரசாத பொருட்கள்
Madurai Meenakshi Temple Prasadam Price Hike : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன.
50% விலை அதிகரிப்பு
இந்த பிரசாத பொருட்களின் விலை நேற்று முதல 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பக்தர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளது. ரூ.10க்கு விற்கப்பட்ட பிரசாத பொருட்கள் ரூ.15க்கு(Madurai Meenakshi Temple Prasadam Current Price) விற்கப்படுகின்றன.
இந்து மக்கள் கட்சி கண்டனம்
சபரிமலை சீசன் தொடங்கியதால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலும், பக்தர்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமலும் வியாபார நோக்கத்தோடு பிரசாத பொருட்களின் விலையை திடீரென ஏற்றியதை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.
கோவில் நிர்வாகம் விளக்கம்
இந்த விலை உயர்வுக்கு குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இதற்கு முன்பு 2011ல் பிரசாத பொருட்களின் விலை பத்து ரூபாயாக(Madurai Meenakshi Temple Prasadam Last Price Hike) உயர்த்தப்பட்டது என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலையேற்றப் பட்டுள்ளது என்றும் கூறுவது ஏற்புடையது கிடையாது
கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள்
தனியார் உணவக பொருட்களோடு கோவில் பிரசாதங்களை ஒப்பிட முடியாது. மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மன்னர்களும், செல்வந்தர்களும், ஜமீன்தார்களும், பக்தர்களும் வழங்கிய ஏராளமான சொத்துக்களும், வருமானமும் உள்ளது.
ஏழை பக்தர்கள் வதைக்கலாமா?
இறைவனை தரிசனம் செய்ய வரும் ஏழை, எளிய பக்தர்களுக்கு கட்டணமில்லா பிரசாத பொருட்களை வழங்குவதை விட்டுவிட்டு தனியார் உணவகங்கள் போல் திருக்கோவிலில் பக்தர்கள் தலையில் பிரசாத பொருட்களின் விலையை ஏற்றுவதை எந்த விதத்தில் நியாயம்?
திராவிட மாடல் அரசுக்கு கேள்வி?
அரசுக்கு வருமானம் இல்லாத மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் அம்மதத்தை சார்ந்தவர்களுக்கு வாகனக் கட்டணம் உள்பட அனைத்து இலவச சலுகைகளும், வசதிகளும் செய்து கொடுக்கிறது திராவிட மாடல் அரசு.
திருக்கோயில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லும் இந்துக்களுக்கு மட்டும் எந்த ஒரு சலுகையும் வசதியும் இல்லாமல் பக்தர்களுக்கு கட்டுபாடு விதிப்பதை ஏற்க முடியாது.
விலையேற்றம் - திரும்ப பெறுக
எனவே உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் பிரசாத பொருட்களின் விலை ஏற்றத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.