மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; சென்னைக்கு ஆதவ் அர்ஜூனா, ஈரோட்டுக்கு செங்கோட்டையன்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாகப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
District-wise Ministers-in-Charge Appointed: Adhav Arjuna for Chennai, Sengottaiyan for Erode!
District-wise Ministers-in-Charge Appointed: Adhav Arjuna for Chennai, Sengottaiyan for Erode!2source:google
2 min read

மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் மாவட்ட வாரியான வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களை சென்றடைவதை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இயற்கை சீற்றம் மற்றும் நோய்த்தொற்று போன்ற அவசர காலங்களில் கூடுதல் பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, முக்கிய மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு.

விழுப்புரம் மற்றும் கடலூர்

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் திருவண்ணாமலை

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு அதிகாரிகளுடன் இணையும் அமைச்சர்கள்

தமிழ்நாடு அரசின் அனைத்து துறை சார்ந்த திட்டப் பலன்களும் தங்குதடையின்றி, விரைவாகப் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இதற்காக, ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட அளவிலான திட்டப் பணிகளை கூர்ந்தாய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமைச்சர்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அவசரக் கால நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிலவும் உள்ளூர் சிக்கல்களை கண்டறிந்து தீர்க்க முதன்மை பங்காற்றுவர்.

குறிப்பாக, இயற்கை சீற்றங்கள், பெருந்தொற்று பரவல் அல்லது இன்னபிற இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போது, போர்க்கால அடிப்படையில் அவசரகால பணிகளை முடுக்கிவிடவும், கூடுதல் உள்கட்டமைப்பு பணிகளைக் கண்காணிக்கவும் இவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் !

1. விழுப்புரம் மற்றும் கடலூர்: N. ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை)

2. சென்னை மற்றும் திருவண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா (பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை)

3. மயிலாடுதுறை: P. வெங்கடரமணன் (உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை)

4. திருவள்ளூர்: ரா. குமார் (செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை)

5. திருநெல்வேலி: நெ. மரிய வில்சன் (நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை)

6. பெரம்பலூர்: ராஜ்மோகன் (பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை)

7. காஞ்சிபுரம்: க. தென்னரசு (வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை)

8. திருப்பத்தூர்: R.V. இரஞ்சித்குமார் (வனத்துறை)

9. செங்கல்பட்டு: த. சரத்குமார் (மனிதவள மேலாண்மைத் துறை)

10. கள்ளக்குறிச்சி: வன்னி அரசு (சமூக நீதித் துறை)

11. இராணிப்பேட்டை: வ. காந்திராஜ் (கூட்டுறவுத் துறை)

12. தருமபுரி மற்றும் அரியலூர்: ப. ராஜ்குமார் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை)

13. நாகப்பட்டினம்: A.M. ஷாஜகான் (சிறுபான்மையினர் நலத்துறை)

14. தஞ்சாவூர்: வினோத் (வேளாண்மை - உழவர் நலத்துறை)

15. திருச்சி: ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை)

16. கரூர்: சி. விஜயலக்ஷ்மி (பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை)

17. நாமக்கல்: த. லோகேஷ் தமிழ்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

18. திருப்பூர்: டாக்டர் K.G. அருண்ராஜ் (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை)

19. நீலகிரி: செ. கமலி (கால்நடைத்துறை)

20. வேலூர்: ம. விஜய் பாலாஜி (கைத்தறி, துணி நூல் மற்றும் காகிதத் துறை)

21. ஈரோடு: K.A. செங்கோட்டையன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை)

22. கோவை: வே. சம்பத்குமார் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை)

23. மதுரை மற்றும் தேனி: R. நிர்மல்குமார் (எரிசக்தி மற்றும் சட்டத்துறை)

24. புதுக்கோட்டை: ஜா. முகமது பர்வேஸ் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை)

25. சிவகங்கை: டாக்டர் TK. பிரபு (இயற்கை வளங்கள் துறை)

26. கிருஷ்ணகிரி: S. கீர்த்தனா (தொழில்துறை)

27. விருதுநகர்: கு. ஜெகதீஸ்வரி (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை)

28. திருவாரூர்: பெ. விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை)

29. தூத்துக்குடி: ஸ்ரீநாத் (மீன் வளம் – மீனவர் நலத்துறை)

30. இராமநாதபுரம்: பெ. மதன் ராஜா (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை)

31. சேலம்: ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத்துறை)

32. கன்னியாகுமரி: செ. ராஜேஷ் குமார் (சுற்றுலாத்துறை)

33. தென்காசி: ராஜீவ் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை)

34. திண்டுக்கல்: க. விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in