விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு முடித்து வைப்பு : மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா!

விஜய் மீதான விவாகரத்து மனுவை மனைவி சங்கீதா வாபஸ் பெற்றார். செங்கல்பட்டு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவு.
Divorce case between Vijay and Sangeetha concluded
Divorce case between Vijay and Sangeetha concludedgoogle
1 min read

Actor Vijay's wife, Sangeetha, has withdrawn the divorce petition filed against him. The Chengalpattu court has issued an order closing the case.

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்திருந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அவ்வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து வழக்கின் பின்னணி

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.

விவாகரத்து வழக்கில் கோரப்பட்ட கோரிக்கைகள்

மனுவில் விவாகரத்து, நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமை ஆகியவற்றை கோரியிருந்தார்.

முந்தைய விசாரணைகள்

வழக்கின் விசாரணைகளின் போது இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில், இருவரும் பிரபலங்கள் என்பதால் காணொலி வாயிலாக விசாரணை நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

லண்டனில் இருந்த சங்கீதா காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் முதல்வர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மனு வாபஸ்

நீதிமன்ற விசாரணையின் போது, மேற்கொண்டு வழக்கை தொடர விருப்பமில்லை என்றும், விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in