திமுகவுடன் கூட்டணி 'கேப்டன் ஆன்மா மன்னிக்காது : தேமுதிக சந்தித்த கொடுமைகள், அவமானங்கள் : பாஜக விமர்சனம்!

BJP Criticized DMDK DMK Alliance 2026 : மக்கள் விரோத திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்ததை கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
DMDK DMK Alliance 2026 : Tamil Nadu BJP criticized captain's soul never forgiving DMDK for forming an alliance with DMK
DMDK DMK Alliance 2026 : Tamil Nadu BJP criticized captain's soul never forgiving DMDK for forming an alliance with DMKhttps://x.com/BJP4TamilNadu/with_replies
1 min read

நெருக்கடியில் தேமுதிக

BJP Criticized DMDK DMK Alliance 2026 : வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குள்ள கட்சியான தேமுதிக, 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.

தேமுதிகவின் அங்கீகாரத்தை பாதுகாக்க சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும், 8 தொகுதிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

திமுக-அதிமுக உடன் பேச்சு

எனவேதான், அதிமுக-திமுக இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 20 தொகுதிகள் வரை தேமுதிக எதிர்பார்க்க, அதிகபட்சம் 7 தொகுதிகள், அவசியம் என்றால் மட்டுமே ராஜ்யசபா சீட் என்ற அளவில் திராவிட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

திமுக கூட்டணியில் தேமுதிக

கடைசி நேர டிவிஸ்ட்டாக திமுக கூட்டணியில் முதல்முறையாக இணைந்துள்ளது தேமுதிக. முதல்வர் ஸ்டாலினை நேராக சென்று சந்தித்த தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை உறுதி செய்தார்.

200 தொகுதிகளில் வெற்றி - பிரேமலதா

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாகவும், 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

தேமுதிக விமர்சிக்கும் தமிழக பாஜக

திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழக பாஜக, ”தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள்.

தேமுதிகவுக்கு திமுக செய்த கொடுமைகள்

அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக.

கேப்டன் ஆன்மா மன்னிக்காது

அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என பாஜக தனது பதிவில் கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in